பணப் பேய்
அதைக் கண்ட பெரியாவர் ஓடி போய் தூக்கி பார்த்தார். சுய நினைவுயின்றி கிடந்தான். பக்கத்தில் விளையாடியச் சிறுவர்களை பார்த்து இந்தப் பையன் யார் என்றுக் கேட்டார்.
தெரியல தாத்தா இன்னாக்குதன் இவன் இங்க விளையாடவே வந்தான்.
சரி, பக்கத்துல ஆஸ்பத்திரி இருக்கா?,
இல்ல, தாத்தா பஸ் எறி போகனும். எப்படியும் பஸ்ல போனா அரைமணி நேரம் ஆகும் தாத்தா.
இங்க பக்கத்துல போன வாரம் தான் புதித ஒரு கிளினிக் தொறந்தாங்க அது இருக்கு தாத்தா.
எங்கே?
எங்கே?
அதோ அந்த குளத்துக்கு பக்கத்து வீட்டுலதான்
(ரெண்டு பேரும் அச்சிறுவனைத் தூக்கிகிட்டு போய் கிளினிக் வெளியில் திண்ணயிலுள்ள பெஞ்சில்
படுக்க வைத்துவிட்டு டாக்டர் அம்மாவை பார்த்தார்.)
அம்மா, யார் குழந்தையின்னு தெரியல
ரோட்டில் விளையாடியப் பையன் மயக்கம் போட்டு விழுந்துட்டான் பாருங்க டாக்டர் என்றார் பெரியவர்.
ரோட்டில் விளையாடியப் பையன் மயக்கம் போட்டு விழுந்துட்டான் பாருங்க டாக்டர் என்றார் பெரியவர்.
சரிசரி, அங்கே போய் ரூ.2000/- பணத்தக் கட்டிட்டு வாங்க என்றாள் டாக்டர்.
அம்மா என்னிடம் அவ்வளவு பணமில்லை வைத்தியத்தை பாருங்க யார் பிள்ளையின்னு விசரித்து
அவர்களிடம் பணம் கட்டச் சொல்றேன் அம்மா தயவு செயதுப் பாருங்கம்மா.
முடியாது நீ பயல தூக்கி கொண்டு GHக்கு போ இது ஒன்னும் உன் அப்பன் வீட்டுக் கிளினிக் இல்ல
புரியுதா போய.
கொஞ்சம் அந்த பிள்ளை முகத்தையவது பாருங்க டாக்டர்.
நர்ஸ், இந்த ஆள வெளியில அனுப்பு.
அந்த பெரியவர், நீ நல்லாவே இருக்க மாட்டபோ எனத் திட்டிக் கொண்டு திண்ணையில் கிடந்தப் பையனை
GH கொண்டு போக பஸ்ஸுக்காக காத்திருந்து 10 நிமிடம் கழித்து வந்தது,
பேருந்தில் போய்கொண்டு இருக்கும் போது அந்த பையனுக்கு வெட்ட ஆரம்பித்தது.
பேருந்தில் போய்கொண்டு இருக்கும் போது அந்த பையனுக்கு வெட்ட ஆரம்பித்தது.
அந்த பெரியவர் GH -ல் அச்சிறுவனை சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டான்.
பெரியவரே இந்த பையன் பேரு என்ன? என்று டக்க்டர் கேட்டார்.
தெரியலங்க அய்யா ரோட்டில் மயங்கி கிடந்தான் அதன் தூக்கி கொண்டு இங்க வந்தேன்.
சிறிது நேர சிகிச்சைக்கு பின் டாக்டர் வெளியே வந்தார்.
பெரியவரைப் பார்த்து மனச தேத்திக்கங்க 10 நிமிடத்துக்கு முன் கொண்டு வந்திருந்தால்
பையனைக் காப்பாத்தி இருக்கலாம்.
யார் பையன்னு விசரித்து கொண்டு போங்கள் இல்லன்னா போஸ்ட்மடம் பண்ண வேண்டிவரும்.
சிறிது நேரம் கழித்து மருத்துவமனைக்கு ஒரு சுமோ வந்தது, கிளினிக் வைத்திருந்த டாக்டர்
வந்தாள்,
அவளைக் கண்டதும் நீ நல்லவே இருக்கமாட்டாடி, நீ எல்லாம் எதுக்கு டாக்டருக்கு
படிச்சியோ தெரியால பணம் பணமென்று ஒரு உயிர கொன்னுட்டியே நீயூம் அந்த குழந்தை போல இல்ல,
பைத்தியாம திரிஞ்சி அனதையாதன சாவுதான் உனக்கு வரும் போ என்று திட்டினார் அந்தப் பெரியவர்.
இந்த கிழவன் அதிகம பேசுறான். மார்ச்சுவரிக்கு அனுப்பி கேச போடு, அவன் மேல என்று அதட்டிவிட்டு
அச்சிறுவனைப் பார்த்தாள்.
அவளும் மயங்கி விழுந்தாள் தண்ணீர் முகத்தி அடித்து மயக்கம் தெளியா வைத்ததும் தான் ஒரு
டாக்டர் என்பதை மறந்து அழுது புரண்டாள்.
இறந்து கிடப்பது அவள் பெற்றப் பிள்ளை.
மருத்துவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
வைத்தியம் பார்க்க வரும் நோயளியிடம் பணத்தை பார்க்காமல்
அவர்கள் உடல் நலத்தை பருங்கள்.
உங்களை தெய்வமாக பார்ப்பார்கள்
மக்கள்.
நீங்கள் கேட்கும் பணத்தையும் பிறகு
தருவார்கள்.
பணம் வைத்திக்கும் போது நோய்வருவதில்லை.
புரிந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக