என்னைத் தெரிந்துகொள்ள

ஞாயிறு, 27 மே, 2012

அருள்மிகு மாசாணி அம்மா நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களும் நிறைவேற்றி வைக்கும்

அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில்
ஆனைமலை, பொள்ளாச்சி.

நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களும் நிறைவேற்றி வைக்கும் அருள்மிகு மாசாணி அம்மா
இச்செதியை பலரிடம் கூறுங்கள் 

இத்திருத்தலத்திற்கு சென்று வாருங்கள்
தினம் வணங்குங்கள்
அருள்மிகு மாசாணி அம்மாவின் பொருமை
நீங்கள்  உணர்ந்து பாருங்கள் -  இதை
நீங்களே பலரிடம்
அருள்மிகுஅம்பாளின் ஆசியை கூறுங்கள்


ஆதனூரிலிருந்து செ.வீர அழகிரி


   தல சிறப்பு:  உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி மேலே நோக்கியபடி அருள்பாலிக்கிறாள். சீதையை மீட்கச் சென்ற ஸ்ரீராமர், இந்த அம்மனை வணங்கி அருள்பெற்றுச் சென்றுள்ளது சிறப்பு.



அம்பாளுக்கு எதிரே மகாமூனீஸ்வரர், பிரகாரத்தில் பேச்சி, துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.மிகவும் சக்தி வாய்ந்த சிறு தெய்வமான மாசாணி அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் ‘மயான சயனி’ என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உரையும் இடம்,கோவை மாவட்டத்தின், ஆனைமலை என்னும் சிற்றூரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆழியாற்றின் கிளை நதியான உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் குடி கொண்டுள்ள மற்றைய தெய்வங்கள், மகா முனீஸ்வரர் மற்றும் நீதிக்கல் தெய்வம்.
                                                                   
நேர்த்திக்கடன்: அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி,  மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

                   




 தலபெருமை:
பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால்,பல பிரச்னைகளைச் சந்தித்து, உடல் உபாதைகளால்அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள். அவளது தரிசனம் பெற ஆனைமலைக்கு செல்ல வேண்டும். சீதையை மீட்கச் சென்ற ஸ்ரீராமர், இந்த அம்மனை வணங்கி அருள்பெற்றுச் சென்றுள்ளது சிறப்பு.

ராமர் வழிபாடு : சீதையை ராவணன் கவர்ந்து சென்ற போது, அவளை மீட்க ராமர் இவ்வழியே சென்றார். அப்போது, இம்மயானத்தில் பராசக்தியின் வடிவாய் மாசாணியம்மன் இருப்பதை அறிந்து, மயான மண்னைக் கொண்டு அம்பாளை சயன உருவமாக செய்து வழிபட்டுச் சென்றார்.

பெயர்காரணம் : இங்கு அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தருவதால் "மயானசயனி' என்றழைக்கப்பட்டு,காலப்போக்கில் "மாசாணி'என்றழைக்கப்படுகிறாள்.

யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என அழைக்கப்பட்ட இவ்வூரை "உம்பற்காடு' என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

பெண்களின் அம்மன் : இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைபாக்கியம் உண்டாகும். செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை.

இக்கோயில் வளாகத்தில் உள்ள "நீதிக்கல்லில்' மிளகாய் அரைத்து அப்பினால், திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும், "முறையீட்டுச்சீட்டில்' குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர். அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும்.






                                                    
அன்றாடம் ஆயிரக்கணக்கில் பகதர்கள் அன்னையை தரிசித்த வண்ணம் உள்ளனர். அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்தக் கோவிலில் ஒரு பிரத்யேகமான பழக்கம், பக்தர்கள் தங்கள் குறைகளையும், தேவைகளையும் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அதனை அன்னையின் பாதத்தில் பூசாரியின் மூலம் சமர்பிக்கும் போது, அன்னைத் தங்கள் உண்மையான ஆழ்ந்த பக்தியைக் கண்ணுற்று, தங்கள் குறைகளுக்குச் செவி சாய்த்து அதனை மூன்று வாரங்களில் நிவர்த்தி செய்து விடுவதாகவும் நம்பிக்கை பரவலாக உள்ளது.

இந்தக் கோவிலின் மிக சுவாரசியமான விசயமே, அன்னையின் உடனடி நீதி வழங்கும் சக்தி அம்சமான நீதிக்கல்! தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்படும் மக்கள் அல்லது தங்களுடைய பொருட்கள் தொலைந்து போனாலோ, வியாபாரத்தில் பேரிழப்பு ஏற்பட்டாலோ அன்னையின் உதவி நாடி வந்து அங்கிருக்கும் நீதிக்கல்லின் தெய்வத்திடம் முறையிட்டு அங்குள்ள ஆட்டுரலில் மிளாகாய் போட்டு அரைப்பர்கள்.அரைத்த அந்த மிளகாய் விழுதை நீதிக்கல்லின் மீது ஆழந்த பக்தியுடன் பூசுவார்கள்.இதனால் தங்களுடைய குறைகள் விரைவில் தீர்க்கப்படுவதாகவும் நம்புகின்றனர் .

                            
  தல வரலாறு:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான். அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான். அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும்கட்டளையிட்டிருந்தான்.

ஓர்நாள், ஆழியாற்றில் குளித்துக்கொண்டிருந்து இளம்பெண் ஒருத்தி, ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள். இதையறிந்த மன்னன், அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான். ஊர்மக்கள் எதிர்த்தனர். ஆனால், மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான்.

வருத்தம் கொண்ட மக்கள் மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி, அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர். காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட, மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி விழிபட்டனர்.
இது சங்க காலத்தில் உம்பற்காடான, ஆனைமலையில் நடந்த கதை. இந்தப் பகுதியை நன்னன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவன் ஆழியாற்றங்கரையில் இருந்த தன் அரசு தோட்டத்தில் ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தான்.
                                                
ஒரு நாள், விதி வசத்தால், ஆழியார் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒரு பெணகள் குழுவிலிருந்த ஒரு பெண், பக்கத்தில் இருந்த நன்னனின் மாந்தோட்டத்து மரத்திலிருந்த ஒரு மாங்கனி அந்த ஆற்றில் விழுந்ததைக் கண்டு, அதன் கட்டுப்பாடு குறித்து மறந்து போனவளாக, அதனை உண்டுவிட்டாள். இதை அறிந்த நன்னன் அப்பெண்ணை உடனடியாக கொலை செய்துவிடும்படி உத்த்ரவிட்டான். அப்பெண்ணின் தந்தை அதற்குப் பிராயச்சித்தமாக, எடைக்கு எடை தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தோரு களிற்றையும், அந்தப் பெண் அறியாமல் செய்த தவறுக்காக தண்டம் இழைப்பதாகக் கூறியும் இரக்கமற்ற அந்த மன்னன், நன்னன் அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டான்.பிற்காலங்களில் அந்தப் பெண்ணின் மிக நெருங்கியத் தோழியான இன்னொரு பெண் அரசனின் மீது கடுங்கோபம் கொண்டு அவனை பழி தீர்ப்பதற்காக, போரின் போது கொன்று விட்டாள் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு அந்தப் பெண் ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்த மயானத்தில் புதைக்கப் பட்டுள்ளாள். மக்கள் அவள் உருவ நடமாட்டம் இருப்பதைக் கண்டு , வழிபட ஆரம்பித்து உள்ளனர். அந்தப் பெண்ணைத்தான் மயான சயனி என்று வழங்கி, காலப்போகில் அது மருவி, மாசாணி என்றாகி உள்ளது.


இதே மாசாணி அம்மன், ஸ்ரீ ராமர் காலத்துடன் சம்பந்தப்படுத்தி சொல்லப்படுகிறது.விசுவாமித்திர முனிவர் கடகனாச்சி மலையில் யாகம் நடத்துவதற்கு முடிவெடுத்த போது, தீய சக்திகள் கொண்ட தடகா என்ற அரக்கன், அந்த மலையை வேட்டையாடி, முனிவரின் யாகத்திற்கும் ஊறு விளைவித்தான். ஆகவே விசுவாமித்திரரின் வேண்டுதலின் பேரில், தசரத மன்னன் ராம, இலக்குவனை முனிவருடன், யாகத்தைக் காக்கும் பொருட்டு அனுப்பி வைத்தார். பார்வதி தேவி ராம இலக்குவன் முன் தோன்றி, அந்த அரக்கனை அழிப்பதற்கு சக்தியையும், ஆசியையும் வழங்கி, அந்த அரக்கன் கொல்லப்பட்டவுடன், அந்த சிலையை அழித்து விடும்படியும் கூறினார். ஆனால் ஸ்ரீராமரோ அந்தச் சிலையை அழிக்க மறுத்து மக்களைக் காக்கும் பொருட்டு அங்கேயே விட்டு வைத்தார். அந்த பார்வதி சிலைதான் மாசாணி அம்மன் என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீராமர் சீதாப்பிராட்டியைத் தேடி இலங்கைக்குச் செல்லும் வழியில் மாசாணி அம்மனை தரிசித்து, யாகம் நடத்தி, அந்த மயானத்தில் பூசை செய்யவும், மனம் குளிர்ந்த மாசாணி நேரில் தோன்றி ராவணனுடனான போரில் வெற்றி பெற ஆசி கூறி அனுப்பி வைத்தாராம்.


                                                   
விசேடமான நாட்கள்

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மாசாணி அம்மனுக்கு உகந்த நாட்கள். அன்று அம்மன் வழிபாட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேட பூசைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் குண்டம் மிதிவிழா சிறப்புடன் நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குண்டம் மிதி விழாவில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை மாத பௌர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேட பூசைகளுடன், 16 ஆம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர். 18 ஆம் நாள் கொடி இறக்கி, 19 ஆம் நாள் விசேச அபிசேக, ஆராதனைகளுடன், விழா நிறைவு பெறும்.

திருவிழா நாட்கள்
  • வைகாசி விசாகம்,
  • ஆடிப்பெருக்கு
  • ஆடிப்பூரம்
  • தமிழ் வருடப்பிறப்பு
  • அம்மாவாசை
  • விநாயகர் சதுர்த்தி
  • தீபாவளி
  • கார்த்திகை தீபம்
  • மார்கழி தனுர் பூசை
  • நவராத்திரி

திறக்கும் நேரம்

POOJA TIMINGS
Opening of the Sanctum Sanctorum 6.00 A.M.
Anointment and adornment (Abhishekam and Alankaram) 6.30 A.M.
Noon Worship (Uchikala Pooja) 11.30A.M. to 12.30 P.M.
Abhishekam and Alankaram 4.00P.M. to 4.30 P.M.
Evening Worship (Sayarakshai Pooja) 6.30 P.M. to 7.30 P.M.
Sannadhi Thirukappu (Closing) 8.00 P.M.



கோவில் வளாகம், காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
ஆனைமலை, கோவையிலிருந்து, 60 கிமீ தூரம் உள்ளது. கார் அல்லது பேருந்தில் செல்ல 1.30 மணி ஆகும்.

Arulmigu Masani Amman Temple - Fees Structure

OFFERING
FEES
Archanai Rs. 2.00
Offering of Coconut Rs. 0.50
Submission of Grievance Rs. 5.00
Anointment with oil Rs. 10.00
Anointment Rs. 5.00
Udhiramalai Rs. 2.50
Anointment with milk Rs. 2.00
Mudikayiru Rs. 2.00
Passage for worshipping the deity Rs. 5.00
Sathupadi Rs. 10.00
Tonsure Rs. 10.00
Special Passage for Worshipping the deity Rs. 25.00
Nei Deepam Rs. 2.00
Kani vazhipadu Rs. 3.00
Thiru Vilakku Vazhipadu Rs.101.00
Thangamalar Archanai Rs. 100.00

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக