என்னைத் தெரிந்துகொள்ள

ஞாயிறு, 20 மே, 2012

மொழியியல் ஒரு பொக்கிசம் (1)




மொழியியல் ஒரு பொக்கிசம் (1)

தாயின் கருவறையிலிருந்து
வெளியுலகை பார்க்கும் போதே
பசியால்
அழுகையை மொழியைக் கற்றுக்கொள்கிறாய்!...

தாய் பால் பசி தீர்த்ததும்
புன்னகை மொழியைக் கற்றுக்கொள்கிறாய்!...

அம்மா என அழைக்கும் முன் –நீ
தாயின் உடல் அசைவால்
மொழியைக் கற்றுக்கொள்கிறாய்!...

இப்படி
குழந்தை மொழியிலிருந்து தொடங்குகிறது
உள மொழியியல்.

உனக்கு சோறுட்ட உன் தாய்
வானத்து நிலா காட்டுவாள் - நீ
சோறுண்ண மறுத்து
அந்த நிலாவையும்
கண்ணில் படும் காட்சிகளையும்
பார்பாய்!…

மீண்டும் உன்னை சமதானபடுத்தி
உன்னை தூங்க வைக்க தாலாட்டு பாடுவாள் –நீ
தூங்க மறுத்து
தாலாட்டையும்
காதில் கேட்கும் மற்ற ஒளிகளையும்
கேட்பாய்!...

இப்படி போய் கொண்டிருக்கும் வேலையில் _ நீ
ஒரு நாள்
உன் மழலை சொல்லால்
உன் தாயையும் தந்தையையும்
உறைய வைத்தாய்!...

இப்படி
உன் கண் வாய் செவிகளுக்கு
மூளைநரம்புத் தூண்டுவதே
நரம்பு மொழியியல்.

                                                          தொடரும்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக