நீதி இலக்கியங்கள் :
அறக் கருத்துகளைக் கூறுவன அறநூல்கள். நீதிநூல்கள் என அண்ணாமலைப்பல்கலைக்கழகப் பேரா.டாக்டர் ச. மெய்யப்ப்பன் அவர்கள் கூறுகிறார். உலகில் வாழ்வாங்கு வாழ வைகாட்டுவன; உள்ளம் தளிச்சியடையம் போது உணர்ச்சியூட்டி உய்விப்பன நீதிநூல்கள் எனக் குறிப்பிடுகின்றார்.
சங்க இலக்கியத்தில் வாழ்வியற் கருத்துகளோடு அறக்கருத்துகள் பல நிலைகளில் இடம் பெற்றுள்ளன. இளங்கோவடிகளின் சிவப்பதிகாரமும் சீத்த்லைச் சாத்தனாரின் மணிமோகலையும் அறக் கருத்துக்களை மிகுதியாகக் கூறும் காப்பியங்களாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பதிணொரு நீதிநூல்கள் உள்ளன. அறநூல்களின் இமயாகத் திருக்குறள் ஒளிவீசுகிறது